Tuesday, February 12, 2019
ஒரு ஊரின் அபிவிருத்தியில் அரசியல் பிரதிநிதியின் வகிபாகம் என்ன?
சமூக பொருளாதார அபிவிருத்தி பிரச்சினைகளோ ஆயிரமாயிரம்..... உதாரணத்திற்கு மாத்திரம் இரண்டு:
கழிவு முகாமைத்துவம்: கல்முனை மாநகர சபைக்குள் நாளாந்தம் 40 தொன் குப்பை சேர்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு பற்றி இன்னும் மூச்சு விட்டுக்கூட பார்க்கவில்லை. வெறும் கெம்பக்டர் அதுவும் 120000 சனத்தொகைக்கு மேலதிகமாக ஒன்றை சேர்ப்பதால் பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை. தோணா தாமரைக்குளம் கரைவாகுப்பற்று கரையோரப்பகுதிகள் என்று எங்கும் குப்பைகளாலும் சு10ழல் மாசடைந்து கிடக்கிறது.
கல்வி: எமது பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய இரு பாடசாலைகள் உட்பட ஏனைய பாடசாலைகள் அனைத்திலும் கல்வி வீழ்ச்சியடைந்திருப்பது தெரிந்தும் அதற்கு எந்த திட்டமும் இல்லை. ஒரு பாடசாலை நாளில் ஏழு மணி நேரம் எமது பிள்ளைகள் செலவழிக்கிறார்கள். பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதை விட்டு விட்டு தொடர்ந்தும் இந்த பிரதேச பள்ளிவாசல்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடு செய்கின்ற அபிவிருத்தி அரசியலினால் தான் என்ன பயன்? பாடசாலைகளை சீரழித்து பள்ளிகளை அபிவிருத்தி செய்வது என்ன பாவத்திற்கான பிராயச்சித்தமா? எந்தவொரு சமூகத்தினதும் பாடசாலைகளும் அதன் விழுமியக் கல்வியும் எந்தளவு தூரம் ஒரு பிரதேசத்தை அலங்கரிக்கிறதோ அப்பகுதி பள்ளிவாசல்கள் தானாக வளம்பெறும். பள்ளிவாசல்களுக்கு நிதி ஒதுக்குவது மிக இலகுவான காரியமாச்சே...அது போன்ற சிறு வேலைகளை செய்யத்தான் மக்கள் அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்தனரா?
மீண்டும் மீண்டும் நிருபிக்கிறீர்கள்... எமக்கு இயலுமானது சிந்தனைக்கு எட்டுவது அவ்வளவுதான்...SMART City... Green City... எல்லாம் மேடைப்பேச்சுக்கு மாத்திரமே... நாம் பள்ளிகளை அலங்கரித்து மார்க்கத்திற்கு உதவும் எண்ணத்தை மக்களின் மனதில் பதிக்க எண்ணுவீர்களானால் அது சமூகத்தை மார்க்கத்தின் பெயரில் கொலை செய்வதற்கு சமம் என்பதை ஏன் இன்னும் உணரவில்லை..
Subscribe to:
Posts (Atom)