Wednesday, December 19, 2018

உள்ளுராட்சி அரசியலும் எதிர்கால கரையோர நகரங்களும் - 2


அஸ்லம் சஜா அப்துல் மஜீட்
விரிவுரையாளர், பொறியியல் பீடம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் 

இலங்கையிலுள்ள 331 பிரதேச செயலகப்பிரிவுகளில் சன அடர்த்தி கூடிய முதல் 15 இடங்களில் கிழக்கு மாகணத்தை சேர்ந்த 4 கரையோர நகரங்கள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர் நகரம் மற்றும் அம்பாரையில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுமே; இந்த நான்கு நகரங்களாகும். அத்துடன் இலங்கையிலேயே உள்ள 331 பிரதேச செயலகப்பிரிவுகளில் 10 சதுர கிலோமீட்டர் பரப்பிற்கும் குறைவான 6 பிரதேச செயலகப்பிரிவுகளில் இந்நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளும் உள்ளடங்கும். இலங்கையின் சராசரியான சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 325 பேராகும். ஆனால் இங்கு குறிப்பிட்ட 4 நகரங்களினதும் சனத்தொகை அடர்த்தியானது 10 - 15 மடங்குகளால் அதிகமாகும் என்பதே இங்கு குறிப்பிட்டு நோக்கத்தக்கது. இலங்கையின் பிரதேச செயலகப்பிரிவுகளில் சனத்தொகை அடர்த்தி கூடிய இடங்களில் காத்தான்குடி நான்காம் இடத்திலும் ஏறாவூர் நகரம் ஆறாம் இடத்திலும் கல்முனை எட்டாம் இடத்திலும் சாய்ந்தமருது பன்னிரன்டாம் இடத்திலும் காணப்படுகின்றது. இதிலும் மக்கள் வாழுகின்ற (ர்யடிவையடிடந யசநய) பகுதியை மாத்திரம் கருத்தில் கொண்டால் இந்த சனத்தொகை அடர்த்தி பன்மடங்கு அதிகமாக காணப்படும். எதிர்காலத்தில் இந்நகரங்களில் மக்கள் ஆரோக்கியமாக வாழவேண்டுமானால் அதிகரித்து காணப்படுகின்ற சனத்தொகை அடர்த்தி எதிர்கால சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப இந்நகரங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது (360 னநபசநந உhயபெந்) தவிர்க்கமுடியாததாகும். இப்புள்ளி விபரங்களை அவதானிக்கும் போது எமது நகரங்களின் நிலப்பற்றாக்குறையையும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் காணி தொடர்பான உரிமைப்பிரச்சினைகளையும் கோடிட்டுக்காட்டுகின்றன. அமையவிருக்கும் புதிய மாநகர நகர சபைகள் அதற்கு தெரிவாகவிருக்கும் புதிய அங்கத்தவர்கள் இம்மாற்றத்தை நோக்கிய திட்டங்களையும் திறன்களையும் கொண்ட துர்ரநோக்குடைய தலைவர்களாக இருந்தால் மாத்திரமே இம்மாற்றத்தினை நாம் எதிர்பார்க்கமுடியும்.

(னுயவய ளுழரசஉந: ர்ழரளiபெ யனெ Pழிரடயவழைn ஊநளெரள 2012இ னுநியசவஅநவெ ழக ஊநளெரள யனெ ளுவயவளைவiஉள)
பொதுவாக எல்லா நகரங்களிலும் மிக உடனடியாக தீர்க்க வேண்டிய பல பௌதீக சமூக பொருளாதார சு10ழல் சார்ந்த பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய பிரச்சினையாக எல்லா மக்களும் பொதுவாக அதிக முறைப்பாட்டை செய்கின்ற சு10ழலியல் பிரச்சினைகளையே கருத வேண்டியிருக்கிறது. சரியான திண்மக்கழிவு முகாமைத்துவமின்மையால் நாம் வாழும் மிக அடர்த்தியான நகரங்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகியிருக்கிறது. எமது நகரங்களில் காணப்படும் அழகு படுத்தப்பட்டு பூங்காக்களாகவும் குடும்பங்களுடன் ஓய்வெடுக்கும் நீர்நிலைகளை அண்டிய பகுதிகள் குப்பைகளால் மாசுபடுத்தப்பட்டு டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு ஏதுவான ஒரு சு10ழலை ஏற்படுத்தியிருக்கிறது. வித்தியாசமான குப்பைகளை பிரித்து சேகரிக்கும் முறைமையிலே காணப்படும் பல்வேறு வளப்பற்றாக்குறைகளாலும் குறைபாடுகளாலும் எமது நகர மாநகர சபைகள் தொடர்ந்தும் வினைத்திறனற்ற சேவைகளையே வழங்கி வருகின்றன. நீர்நிலைகளை சுத்தம் செய்தல் மீண்டும் அவை மாசடையாமல் இருப்பதற்கான செயற்திட்டங்கள் என்பன திண்ம கழிவு சேகரிப்புடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படாத விடத்து மீண்டும் நீர்;நிலைகளும் வீதிகளும் குப்பைகளால் நிரம்பி மாசடைகின்ற நிலையே ஏற்படும். வீட்டில் சேரும் குப்பைகளை தரம் பிரித்தல் பற்றிய ஒரு பாரிய விழிப்புணர்வு வேலைத்திட்டத்தோடு இணைந்ததாக குப்பைகளை சேகரிக்க வரும் வாகனங்களின் நேர அட்டவணை சீர்படுத்தப்பட்டு மக்களுக்கு புதிய தொழில்நுட்பங்களுடாக தெரியப்படுத்தப்படவேண்டும். இவ்விரண்டு வேலைத்திட்ங்களையும் மிக குறுகிய காலத்தில் நகர மாநகர சபைகள் அமுல்படுத்துவதோடு சேகரிக்கும் குப்பைகளை கொட்டுதல்இ மீள்சுழற்சி மீள்பாவனைக்குட்படுத்தல் போன்ற திட்டங்களை சமகாலத்தில் மேற்கொள்ள வேண்டும். நகர மாநகர சபைகள் திண்ம கழிவு முகாமைத்துவத்தை சரியாக செயற்படாதவிடத்து மீண்டுமொரு குப்பை அரசியலுக்கு (புயசடியபந pழடவைiஉள) விலைகொடுக்க வேண்டியேற்படலாம். ஓவ்வொரு வீட்டிலும் ஏற்படும் நாளாந்த குப்பை பிரச்சினை சரியாக முகாமைத்துவம் செய்யப்படாதவிடத்து ஒரு சமூகத்தின் ஊரின் பிரச்சினையாக உருவெடுத்து கொழும்பு மீத்தோட்டமுல்லையில் நடந்தது போன்ற ஒரு அரசியல் பிரச்சினையாகக்கூட மாறலாம். இதேபோல எமது கரையோர பாரிய அபிவிருத்தி திட்டங்களிலே சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் முன்வைக்கப்படவேண்டும். தவறும் பட்சத்தில் ஒலுவில் துறைமுகத்திற்கு ஏற்பட்ட நிலமை போன்ற பாரிய பிழைகளுக்கு இட்டுச்செல்லும். ஒலுவில் துறைமுகம் அமைக்க செலவழிக்கப்பட்ட பாரிய நிதி கரையோர புகையிரதப்பாதை போன்ற எல்லா பிரதேச மக்களுக்கும் பிரயோசனமான குறைந்த செயலிழக்கும் தன்மை வாய்ந்த திட்டங்களை (டுழற சளைம கயடைரசந pசழதநஉவள) அமுல்படுத்தியருக்க முடியும் என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது.
ஏனைய சமூக பொருளாதார பௌதீக பிரச்சினைகளை விட சுகாதார மற்றும் சு10ழல் பிரச்சினைகளே நாட்டில் மட்டுமல்ல உலகிலே மிகப்பிரதான பிரச்சினையாகவும் பேசுபொருளாகவும் உருவெடுத்துள்ளது. அண்மையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில்; எற்பட்ட மிகமோசமான சு10ழல் மாசடைதலின் காரணமாக பாடசாலைகள் நாட்கணக்கில் மூடப்பட்டனஇ பலர் சுவாச நோய்களுக்கு உள்ளானார்கள். இது டெல்லியை அண்டிய பகுதிகளில் விவசாய நிலங்களில் அறுவடையின் பின்னர் எஞ்ஞிய கழிவுகளை எரிப்பதன் மூலமாக வளிமண்டலத்திற்கு ஏற்பட்ட பாதிப்பினாலே உருவான நிலையாகும். இச்சு10ழல் மாசடைவால் உருவான காற்றை சுவாசிப்பது 80 தடவைகள் சிகரட் புகைப்பதால் வரும் சுவாச நோயை விட ஆபத்தானதென மருத்துவர்கள் சுட்டிக்காட்டியருந்தனர். டெல்லியின் வளிமண்டலத்தை புகை சு10ழ்ந்த கருமேகங்களே காட்சியளித்துடன் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுமளவிற்கு டெல்லி நகரமே இஸ்தம்பிதமடைந்திருந்தது. இலங்கையும் இது போன்ற சு10ழலியல் தாக்கங்களுக்கு விதிவிலக்கல்ல.
இலங்ககையில் தொடர்ச்சியாக பாரியளவில் மரணங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விடயங்களில் சாதாரண மரணங்களை தவிர்த்து மிக முக்கியமாகஇ சிறுநீரக நோய் மற்றும் வாகனவிபத்துக்கள் காணப்படுகின்றன. கடந்த வருடங்களில் இக்காரணங்களால் ஏற்பட்டு வருகின்ற மரண வீதத்தை நோக்கும் போது கடந்த 26 வருட யுத்தத்தினால் இலங்கையில் மரணித்தவர்களின் எண்ணிக்கையை தாண்டிவிட்டதா எனத்தோன்றுகிறது. வருடம் தோறும் 3இ000 பேர் வாகன விபத்துக்களினாலும்இ 1இ500 பேர் சிறுநீரக நோயினாலும் மரணிப்;பதாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இவை தவிர டெங்கு நோயும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.
பொலன்னறுவை அநுராதபுரம் வவுனியா போன்ற பிரதேசங்களில் சிறுநீரக நோய் (ஊhசழniஉ முனைநெல னுளைநயளந) மிகப்பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரைக்கும் கடந்த 20 வருடங்களில் இலங்கையில் அண்ணளவாக 20இ000த்திற்கும் மேற்பட்ட உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் 400இ000 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்நோய்க்கான சரியான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் இந்நோய் உடலிற்கு பொருத்தமற்ற இரசாயணங்கள் கலந்த நிலக்கீழ் நீர் மற்றும் விவசாய நிலங்களில் பாவிக்கப்படும் கிருமிநாசிகளினால் ஏற்படுவதாகவே ஊகிக்கப்படுகின்றன. இதுபோன்ற மிக ஆபத்தான நோய்கள் எமது சு10ழலை பாதுகாக்க தவறும் சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும். டெங்கு மற்றும் சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. சுற்றுச்சு10ழலை பாதுகாப்பதில் மக்களுடைய பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக அவசியமாகிறது. சிறந்த கழிவு முகாமைத்துவம் பொது இடங்கள் மாசடைவதை தவிர்;த்தல் குறிப்பாக கடற்கரையோரங்கள் நீர் நிலைகள்  மாசடைவதிலிருந்தும் பாதுகாத்தல்இ கழிவு நீர்  வடிகான்களை சரியான முறையில் பராமரித்தல் போன்ற விடயங்களில் உடனடித்தீர்வுகளுக்கும் நிரந்தரமான தீர்வுகளுக்குமான திட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்படவேண்டும். புhரிய பௌதீக அபிவிருத்தி திட்டங்களை பற்றி வாக்குறுதிகள் வழங்க முன்னர் நாளாந்தம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும். சாதாரண குப்பைப்பிரச்சினைக்குக் கூட தீர்வுகாணாமல் பாரிய நகர அபிவிருத்தி என்ற ஆசை வார்த்தைகளின் மூலம் அரசியல் செய்ய முனைவது தோல்வியிலேயே முடிவடையப்போகிறது என்பதை எதிர்வரும் நகர மாநகர சபைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. மக்களின் உடனடிப்பிரச்சினைகளுக்கு தீர்வினைக்காணாமல் காலம் கடத்தி விட்டு தேர்தல்கள் வரும் போது மட்டும் பாரிய அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை கொண்டு வந்து வெறும் மேடைச்சொல்லாடலாக பெருமூச்சு விடும் அரசியல் கலாச்சாரத்திற்கான மூடுவிழாவை கல்முனை போன்ற மாநகர சபை மட்டுமல்ல ஏனைய உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளும் ஆரம்பிக்குமா என்பதை எதிர்வரும் 10ம் திகதி அறியக்கூடியதாக இருக்கும்.

இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் அரசியலில் மிக முக்கியமான இடமாக கருதப்படுவது கல்முனை மாநகர சபையாகும். 2015ம் ஆண்டைய கணிப்பீட்டின் படி 120இ000 சனத்தொகையில் 68இ198 வாக்காளர்களை கொண்ட கல்முனை மாநகர சபை கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாநகர சபைகளிலும் (மட்டக்களப்பு மாநகர சபை 95இ500 மக்கள் தொகையையும் அக்கரைப்பற்று மாநகர சபை 39இ223 மக்கள் தொகையைக்கொண்டதாகும்) மிகப் பெரியதாகும்.
இத்தேர்தலில் அதிகமான இலங்கை மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்ற ஒரு உள்ளுராட்சி மன்றமாக கல்முனை மாநகர சபை காணப்படுகிறது. கல்முனை மாநகர ஆட்சி இதுவரை காலமும் இருந்த ஆட்சியை விட மிக வித்தியாசமாக அமையப்போவதை ஒரு மிகப்பெரிய மாற்றமாகவே கருதவேண்டும். 1988 இலிருந்து 2015 நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் சராசரியாக 23000 வாக்குகளை அனைத்து தேர்தல்களிலும் பெற்றிருக்கிறது. 2006 மற்றும் 2011 ம் ஆண்டுகளில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலிலும் 2012 மாகாண சபைத்தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டே இவ்வாக்குகளைப்பெற்றது. ருNP உடன் இணைந்து போட்டியிட்ட சந்தர்ப்பங்களில் 2000 தொடக்கம் 4000 வாக்குகள் மாத்திரமே அதிகமாக பெற்றிருக்கிறது (2008 மாகாண சபைத்தேர்தல் மற்றும் 2015 பாராளமன்ற தேர்தல்). இம்முறை கல்முனை மாநகர சபைத்தேர்தலில் முதல் தடவையாக முஸ்லிம் காங்கிரஸ் ருNP சின்னத்திலே களமிறங்கியுள்ளது. எனினும் கடந்த காலங்களைப் போலல்லாது சாய்ந்தமருது சுயேற்சைக்குழுஇ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்இ தேசிய காங்கிரஸ்;இ நல்லாட்சிக்கான தேசிய முன்னனி போன்ற கட்சிகளையும் எதிர்த்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களில் 2009 வரையான காலப்பகுதியை நாட்டில் யுத்த சு10ழ்நிலை நிலவிய காலப்பகுதியாக கருதினாலும்இ 2009ன் பின்னரான 8 வருடங்களில் நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டும் கல்முனை மாநகரசபை மாத்திரம் அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றது மட்டுமல்லாமல் திண்மக்கழிவகற்றல் சு10ழலை துப்பரவாக்கல் போன்ற நாளாந்த மக்களின் பிரச்சினைகளுக்கு கூட தீர்வைத்தேடாமல் காலம்கடத்திவிட்டு இன்று மீண்டுமொரு மாநகர சபைத்தேர்தலை அதுவும் புதிய வட்டார தேர்தல் முறையில் சந்திக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

30 வருட வரலாற்றில் கல்முனை மாநகரத்தை ஆட்சி செய்த முஸ்லிம் காங்கிரஸிற்கு 2018 மாநகர சபைத் தேர்தல் எவ்வாறு அமையப்போகிறது?
- வட்டார முறைத்தேர்தலில் முஸ்லிம்களுக்கான 17 வட்டாரங்களிலும் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துகொள்ளுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
- சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி கோரிக்கையை முன்னிறுத்தி தனியாக சுயேட்சைக்குழுவில் கேட்பதால் ஏனைய 11 வட்டாரங்களிலுமாவது அது வெற்றிகொள்ளுமா?
- 30 வருடமாக கல்முனை மாநகரத்தின் அபிவிருத்தியிலே ஏனைய மாநகரங்களுடன் ஒப்பிடுகையில் சிறியளவாவது குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் கடந்த காலங்களில் ஆட்சி செய்த கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் மக்கள் தொடர்ந்து வாக்களிப்பார்களா?
- தேசிய ரீதியில் முஸ்லிம் உரிமை அரசியலில் முஸ்லிம் கட்சிகள் விட்ட பல தவறுகள்; தொடர்ந்தும் ஊழல் நிறைந்தஇ பணத்தை மையமாக கொண்டு அரசியல் செய்து பழகிய முஸ்லிம் கட்சிகளுக்கும் மக்கள் தொடர்ந்தும் வாக்களிக்க தயாரா?
- மாற்று முஸ்லிம் அரசியல் கொள்கைகளை முன்வைத்து அரசியலில் வந்திருக்கின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னனி போன்ற கட்சிகளின் வருகையால் இந்த மாற்றம் ஏற்படுமா? போன்ற பல கேள்விகளுக்கான விடை இத்தேர்தல் முடிவில் தொக்கிநிற்கின்றன. கல்முனை மாநகர சபையில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப்பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளில் ஏற்படப்போகும் மாற்றம் எதிர்கால சமூக அரசியல் நகர்வுகளில் மிக முக்கிய மாற்றங்களுக்குரிய ஆரம்பமாகவே கருதப்படுகிறது. முஸ்லிம்களை பொருத்தவரையில் இம்மாற்றம் தேசிய அரசியலில் கூட மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய நிலையை தோற்றுவிக்கலாம்.
சுhய்ந்தமருது தனக்கான உள்ளு10ராட்சி சபைத்கோரிக்கையை முன்வைத்து இத்தேர்தலில் முன்னிறுத்தியிருக்கின்ற சுயேட்சை குழு எதிர்கால கிழக்கிலங்கை அரசியலில் மட்டுமல்ல இலங்கை நாட்டின் உள்ளுராட்சி சபை அரசியலில் ஒரு புதிய வழிமுறையை தோற்றுவிக்குமா என்பதை தற்போது ஊகிக்க முடியாவிட்டாலும் இம்முறைமை ஏனைய ஊர்களும் கட்சியை மையப்படுத்திய தேர்தலுக்கு அப்பால் உள்ளுராட்சி சபை அல்லது தமது ஊர் அல்லது சமூகம் சார் உரிமைகளையும் கோரிக்கைகளையும் முற்படுத்தி மாற்று வழிமுறைகளை சிந்திக்கக்கூடிய ஒரு திறவுகோலாக அமையலாம். இத்தேர்தல் முடிவு தமது கோரிக்கையை வென்றெடுப்பதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக பார்க்கப்படுகிறது. இவ்வழிமுறை எதிர்கால உள்ளுராட்சி தேர்தல்களில் ஒரு ஊரை மையப்படுத்திய அரசியல் குழுவிற்கு அல்லது அரசியல் தலைமைத்துவத்திற்கு வித்திடக்கூடும் அல்லது கட்சிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கக்கூடிய குழுவாக மாறவும் கூடும். ஏலவே காத்தான்குடி மற்றும் அக்கரைப்பற்று போன்ற ஊர்களில் ஊரை மையப்படுத்திய அரசியல் தலைமைகளை கண்ட அனுபவம் இப்பிராந்தியத்தில் காணப்படுகிற அதேவேளை இம்முறைமையின் சாதக பாதகங்கள் பற்றிய விமர்சனக்கருத்துக்கள் காணப்படுகின்றன. ஒரு உள்ளுராட்சி சபையினுள் அவ்வூரைச்சார்ந்த கட்சிகள் குழுக்கள் அல்லது தனிநபர்கள் செல்வாக்கு செலுத்தினாலும் மாகாண மற்றும் பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்கு தேசியஇ பிராந்திய அல்லது சமூக ரீதியான பரந்து வியாபித்துள்ள கட்சிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இல்லாவிட்டால் பல உள்ளுராட்சி சபைகள் இணைந்த தொகுதி வாரியான ஒரு கூட்டிணைந்த வடிவத்திற்கு இம்முயற்சிகள் இட்டுசெல்லக்கூடிய சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை. எவ்வாறான வழிமுறைகளானாலும் மாகாண மட்டத்திலும் தேசிய ரீதியிலும் கடந்த கால முஸ்லிம் அரசியல் பிரிவினைகளினால் ஏற்பட்ட பாதகங்கள் ஏதாவொதொரு ஒருங்கிணைப்புள்ளியை நோக்கி நகர வேண்டிய தேவையை மீண்டும் மீண்டும் வலியுருத்திநிற்கின்றன. இப்படிப்பினைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு தேர்தலாக இத்தேர்தல் அமையுமா?

இறுதியாகஇ பல வருடங்களாக ஊழல்இ ஏமாற்று அரசியலையும் பிரதேசவாத  இனவாத சிந்தனைகளையும் விதைத்து தனிநபர் அரசியல் இலாபங்களுக்காக சமூக நலன்களை விற்றுக்கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகளை விட்டு விட்டு மாற்று அரசியல் கட்சிகளுக்கும்இ  சிறந்த திறமையான சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்;வை தேடித்தரக்கூடிய வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கவேண்டிய ஒரு கட்டாய நிலைக்கு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு வழிகளிலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இது எமது அரசியல் கட்டமைப்பில் கடைநிலை மட்டத்தில் மக்களின் பிரதிநிதிகளை தேர்வுசெய்யும் தேர்தலாக இருந்தாலும் அடுத்த கட்ட மாகாண தேசிய மாற்றத்தினை முன்னோக்கி நகர்த்தும் மிக முக்கியமான தேர்தலாகவே இம்முறை அநேக இடங்களில் இத்தேர்தல் பார்க்கப்படுகிறது. கல்முனை மாநகர சபைத்தேர்தல் மட்டுமல்ல குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை சபைகளில் இந்த மாற்றம் ஏற்படக்கூடிய அறிகுறிகளே அதிகமாக தென்படுகின்றன. இம்மாற்றத்தின் மூலமே எமது நகரங்களை இலங்கையிலேயே சிறந்த நகரங்களாக கட்டியெழுப்ப முடியும். சிங்கள தமிழ் முஸ்லிம் சமுகங்கள் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். ஓவ்வொரு ஊருக்கும; உள்ளுராட்சி சபைக்குமான உரிமைகளை பெற்று அவ்வூர்கள் தமது அபிவிருத்தியை முன்கொண்டு செல்ல முடியும்.

No comments:

Post a Comment