Wednesday, December 19, 2018
உள்ளுராட்சி அரசியலும் எதிர்கால கரையோர நகரங்களும் - 2
அஸ்லம் சஜா அப்துல் மஜீட்
விரிவுரையாளர், பொறியியல் பீடம், தென்கிழக்கு பல்கலைக்கழகம்
இலங்கையிலுள்ள 331 பிரதேச செயலகப்பிரிவுகளில் சன அடர்த்தி கூடிய முதல் 15 இடங்களில் கிழக்கு மாகணத்தை சேர்ந்த 4 கரையோர நகரங்கள் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர் நகரம் மற்றும் அம்பாரையில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுமே; இந்த நான்கு நகரங்களாகும். அத்துடன் இலங்கையிலேயே உள்ள 331 பிரதேச செயலகப்பிரிவுகளில் 10 சதுர கிலோமீட்டர் பரப்பிற்கும் குறைவான 6 பிரதேச செயலகப்பிரிவுகளில் இந்நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளும் உள்ளடங்கும். இலங்கையின் சராசரியான சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 325 பேராகும். ஆனால் இங்கு குறிப்பிட்ட 4 நகரங்களினதும் சனத்தொகை அடர்த்தியானது 10 - 15 மடங்குகளால் அதிகமாகும் என்பதே இங்கு குறிப்பிட்டு நோக்கத்தக்கது. இலங்கையின் பிரதேச செயலகப்பிரிவுகளில் சனத்தொகை அடர்த்தி கூடிய இடங்களில் காத்தான்குடி நான்காம் இடத்திலும் ஏறாவூர் நகரம் ஆறாம் இடத்திலும் கல்முனை எட்டாம் இடத்திலும் சாய்ந்தமருது பன்னிரன்டாம் இடத்திலும் காணப்படுகின்றது. இதிலும் மக்கள் வாழுகின்ற (ர்யடிவையடிடந யசநய) பகுதியை மாத்திரம் கருத்தில் கொண்டால் இந்த சனத்தொகை அடர்த்தி பன்மடங்கு அதிகமாக காணப்படும். எதிர்காலத்தில் இந்நகரங்களில் மக்கள் ஆரோக்கியமாக வாழவேண்டுமானால் அதிகரித்து காணப்படுகின்ற சனத்தொகை அடர்த்தி எதிர்கால சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப இந்நகரங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது (360 னநபசநந உhயபெந்) தவிர்க்கமுடியாததாகும். இப்புள்ளி விபரங்களை அவதானிக்கும் போது எமது நகரங்களின் நிலப்பற்றாக்குறையையும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் காணி தொடர்பான உரிமைப்பிரச்சினைகளையும் கோடிட்டுக்காட்டுகின்றன. அமையவிருக்கும் புதிய மாநகர நகர சபைகள் அதற்கு தெரிவாகவிருக்கும் புதிய அங்கத்தவர்கள் இம்மாற்றத்தை நோக்கிய திட்டங்களையும் திறன்களையும் கொண்ட துர்ரநோக்குடைய தலைவர்களாக இருந்தால் மாத்திரமே இம்மாற்றத்தினை நாம் எதிர்பார்க்கமுடியும்.
(னுயவய ளுழரசஉந: ர்ழரளiபெ யனெ Pழிரடயவழைn ஊநளெரள 2012இ னுநியசவஅநவெ ழக ஊநளெரள யனெ ளுவயவளைவiஉள)
பொதுவாக எல்லா நகரங்களிலும் மிக உடனடியாக தீர்க்க வேண்டிய பல பௌதீக சமூக பொருளாதார சு10ழல் சார்ந்த பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய பிரச்சினையாக எல்லா மக்களும் பொதுவாக அதிக முறைப்பாட்டை செய்கின்ற சு10ழலியல் பிரச்சினைகளையே கருத வேண்டியிருக்கிறது. சரியான திண்மக்கழிவு முகாமைத்துவமின்மையால் நாம் வாழும் மிக அடர்த்தியான நகரங்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகியிருக்கிறது. எமது நகரங்களில் காணப்படும் அழகு படுத்தப்பட்டு பூங்காக்களாகவும் குடும்பங்களுடன் ஓய்வெடுக்கும் நீர்நிலைகளை அண்டிய பகுதிகள் குப்பைகளால் மாசுபடுத்தப்பட்டு டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு ஏதுவான ஒரு சு10ழலை ஏற்படுத்தியிருக்கிறது. வித்தியாசமான குப்பைகளை பிரித்து சேகரிக்கும் முறைமையிலே காணப்படும் பல்வேறு வளப்பற்றாக்குறைகளாலும் குறைபாடுகளாலும் எமது நகர மாநகர சபைகள் தொடர்ந்தும் வினைத்திறனற்ற சேவைகளையே வழங்கி வருகின்றன. நீர்நிலைகளை சுத்தம் செய்தல் மீண்டும் அவை மாசடையாமல் இருப்பதற்கான செயற்திட்டங்கள் என்பன திண்ம கழிவு சேகரிப்புடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படாத விடத்து மீண்டும் நீர்;நிலைகளும் வீதிகளும் குப்பைகளால் நிரம்பி மாசடைகின்ற நிலையே ஏற்படும். வீட்டில் சேரும் குப்பைகளை தரம் பிரித்தல் பற்றிய ஒரு பாரிய விழிப்புணர்வு வேலைத்திட்டத்தோடு இணைந்ததாக குப்பைகளை சேகரிக்க வரும் வாகனங்களின் நேர அட்டவணை சீர்படுத்தப்பட்டு மக்களுக்கு புதிய தொழில்நுட்பங்களுடாக தெரியப்படுத்தப்படவேண்டும். இவ்விரண்டு வேலைத்திட்ங்களையும் மிக குறுகிய காலத்தில் நகர மாநகர சபைகள் அமுல்படுத்துவதோடு சேகரிக்கும் குப்பைகளை கொட்டுதல்இ மீள்சுழற்சி மீள்பாவனைக்குட்படுத்தல் போன்ற திட்டங்களை சமகாலத்தில் மேற்கொள்ள வேண்டும். நகர மாநகர சபைகள் திண்ம கழிவு முகாமைத்துவத்தை சரியாக செயற்படாதவிடத்து மீண்டுமொரு குப்பை அரசியலுக்கு (புயசடியபந pழடவைiஉள) விலைகொடுக்க வேண்டியேற்படலாம். ஓவ்வொரு வீட்டிலும் ஏற்படும் நாளாந்த குப்பை பிரச்சினை சரியாக முகாமைத்துவம் செய்யப்படாதவிடத்து ஒரு சமூகத்தின் ஊரின் பிரச்சினையாக உருவெடுத்து கொழும்பு மீத்தோட்டமுல்லையில் நடந்தது போன்ற ஒரு அரசியல் பிரச்சினையாகக்கூட மாறலாம். இதேபோல எமது கரையோர பாரிய அபிவிருத்தி திட்டங்களிலே சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் முன்வைக்கப்படவேண்டும். தவறும் பட்சத்தில் ஒலுவில் துறைமுகத்திற்கு ஏற்பட்ட நிலமை போன்ற பாரிய பிழைகளுக்கு இட்டுச்செல்லும். ஒலுவில் துறைமுகம் அமைக்க செலவழிக்கப்பட்ட பாரிய நிதி கரையோர புகையிரதப்பாதை போன்ற எல்லா பிரதேச மக்களுக்கும் பிரயோசனமான குறைந்த செயலிழக்கும் தன்மை வாய்ந்த திட்டங்களை (டுழற சளைம கயடைரசந pசழதநஉவள) அமுல்படுத்தியருக்க முடியும் என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது.
ஏனைய சமூக பொருளாதார பௌதீக பிரச்சினைகளை விட சுகாதார மற்றும் சு10ழல் பிரச்சினைகளே நாட்டில் மட்டுமல்ல உலகிலே மிகப்பிரதான பிரச்சினையாகவும் பேசுபொருளாகவும் உருவெடுத்துள்ளது. அண்மையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில்; எற்பட்ட மிகமோசமான சு10ழல் மாசடைதலின் காரணமாக பாடசாலைகள் நாட்கணக்கில் மூடப்பட்டனஇ பலர் சுவாச நோய்களுக்கு உள்ளானார்கள். இது டெல்லியை அண்டிய பகுதிகளில் விவசாய நிலங்களில் அறுவடையின் பின்னர் எஞ்ஞிய கழிவுகளை எரிப்பதன் மூலமாக வளிமண்டலத்திற்கு ஏற்பட்ட பாதிப்பினாலே உருவான நிலையாகும். இச்சு10ழல் மாசடைவால் உருவான காற்றை சுவாசிப்பது 80 தடவைகள் சிகரட் புகைப்பதால் வரும் சுவாச நோயை விட ஆபத்தானதென மருத்துவர்கள் சுட்டிக்காட்டியருந்தனர். டெல்லியின் வளிமண்டலத்தை புகை சு10ழ்ந்த கருமேகங்களே காட்சியளித்துடன் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுமளவிற்கு டெல்லி நகரமே இஸ்தம்பிதமடைந்திருந்தது. இலங்கையும் இது போன்ற சு10ழலியல் தாக்கங்களுக்கு விதிவிலக்கல்ல.
இலங்ககையில் தொடர்ச்சியாக பாரியளவில் மரணங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விடயங்களில் சாதாரண மரணங்களை தவிர்த்து மிக முக்கியமாகஇ சிறுநீரக நோய் மற்றும் வாகனவிபத்துக்கள் காணப்படுகின்றன. கடந்த வருடங்களில் இக்காரணங்களால் ஏற்பட்டு வருகின்ற மரண வீதத்தை நோக்கும் போது கடந்த 26 வருட யுத்தத்தினால் இலங்கையில் மரணித்தவர்களின் எண்ணிக்கையை தாண்டிவிட்டதா எனத்தோன்றுகிறது. வருடம் தோறும் 3இ000 பேர் வாகன விபத்துக்களினாலும்இ 1இ500 பேர் சிறுநீரக நோயினாலும் மரணிப்;பதாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இவை தவிர டெங்கு நோயும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.
பொலன்னறுவை அநுராதபுரம் வவுனியா போன்ற பிரதேசங்களில் சிறுநீரக நோய் (ஊhசழniஉ முனைநெல னுளைநயளந) மிகப்பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதுவரைக்கும் கடந்த 20 வருடங்களில் இலங்கையில் அண்ணளவாக 20இ000த்திற்கும் மேற்பட்ட உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் 400இ000 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்நோய்க்கான சரியான காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் இந்நோய் உடலிற்கு பொருத்தமற்ற இரசாயணங்கள் கலந்த நிலக்கீழ் நீர் மற்றும் விவசாய நிலங்களில் பாவிக்கப்படும் கிருமிநாசிகளினால் ஏற்படுவதாகவே ஊகிக்கப்படுகின்றன. இதுபோன்ற மிக ஆபத்தான நோய்கள் எமது சு10ழலை பாதுகாக்க தவறும் சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும். டெங்கு மற்றும் சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. சுற்றுச்சு10ழலை பாதுகாப்பதில் மக்களுடைய பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக அவசியமாகிறது. சிறந்த கழிவு முகாமைத்துவம் பொது இடங்கள் மாசடைவதை தவிர்;த்தல் குறிப்பாக கடற்கரையோரங்கள் நீர் நிலைகள் மாசடைவதிலிருந்தும் பாதுகாத்தல்இ கழிவு நீர் வடிகான்களை சரியான முறையில் பராமரித்தல் போன்ற விடயங்களில் உடனடித்தீர்வுகளுக்கும் நிரந்தரமான தீர்வுகளுக்குமான திட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்படவேண்டும். புhரிய பௌதீக அபிவிருத்தி திட்டங்களை பற்றி வாக்குறுதிகள் வழங்க முன்னர் நாளாந்தம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும். சாதாரண குப்பைப்பிரச்சினைக்குக் கூட தீர்வுகாணாமல் பாரிய நகர அபிவிருத்தி என்ற ஆசை வார்த்தைகளின் மூலம் அரசியல் செய்ய முனைவது தோல்வியிலேயே முடிவடையப்போகிறது என்பதை எதிர்வரும் நகர மாநகர சபைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. மக்களின் உடனடிப்பிரச்சினைகளுக்கு தீர்வினைக்காணாமல் காலம் கடத்தி விட்டு தேர்தல்கள் வரும் போது மட்டும் பாரிய அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை கொண்டு வந்து வெறும் மேடைச்சொல்லாடலாக பெருமூச்சு விடும் அரசியல் கலாச்சாரத்திற்கான மூடுவிழாவை கல்முனை போன்ற மாநகர சபை மட்டுமல்ல ஏனைய உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளும் ஆரம்பிக்குமா என்பதை எதிர்வரும் 10ம் திகதி அறியக்கூடியதாக இருக்கும்.
இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் அரசியலில் மிக முக்கியமான இடமாக கருதப்படுவது கல்முனை மாநகர சபையாகும். 2015ம் ஆண்டைய கணிப்பீட்டின் படி 120இ000 சனத்தொகையில் 68இ198 வாக்காளர்களை கொண்ட கல்முனை மாநகர சபை கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாநகர சபைகளிலும் (மட்டக்களப்பு மாநகர சபை 95இ500 மக்கள் தொகையையும் அக்கரைப்பற்று மாநகர சபை 39இ223 மக்கள் தொகையைக்கொண்டதாகும்) மிகப் பெரியதாகும்.
இத்தேர்தலில் அதிகமான இலங்கை மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்ற ஒரு உள்ளுராட்சி மன்றமாக கல்முனை மாநகர சபை காணப்படுகிறது. கல்முனை மாநகர ஆட்சி இதுவரை காலமும் இருந்த ஆட்சியை விட மிக வித்தியாசமாக அமையப்போவதை ஒரு மிகப்பெரிய மாற்றமாகவே கருதவேண்டும். 1988 இலிருந்து 2015 நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் சராசரியாக 23000 வாக்குகளை அனைத்து தேர்தல்களிலும் பெற்றிருக்கிறது. 2006 மற்றும் 2011 ம் ஆண்டுகளில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலிலும் 2012 மாகாண சபைத்தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டே இவ்வாக்குகளைப்பெற்றது. ருNP உடன் இணைந்து போட்டியிட்ட சந்தர்ப்பங்களில் 2000 தொடக்கம் 4000 வாக்குகள் மாத்திரமே அதிகமாக பெற்றிருக்கிறது (2008 மாகாண சபைத்தேர்தல் மற்றும் 2015 பாராளமன்ற தேர்தல்). இம்முறை கல்முனை மாநகர சபைத்தேர்தலில் முதல் தடவையாக முஸ்லிம் காங்கிரஸ் ருNP சின்னத்திலே களமிறங்கியுள்ளது. எனினும் கடந்த காலங்களைப் போலல்லாது சாய்ந்தமருது சுயேற்சைக்குழுஇ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்இ தேசிய காங்கிரஸ்;இ நல்லாட்சிக்கான தேசிய முன்னனி போன்ற கட்சிகளையும் எதிர்த்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களில் 2009 வரையான காலப்பகுதியை நாட்டில் யுத்த சு10ழ்நிலை நிலவிய காலப்பகுதியாக கருதினாலும்இ 2009ன் பின்னரான 8 வருடங்களில் நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டும் கல்முனை மாநகரசபை மாத்திரம் அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு சென்றது மட்டுமல்லாமல் திண்மக்கழிவகற்றல் சு10ழலை துப்பரவாக்கல் போன்ற நாளாந்த மக்களின் பிரச்சினைகளுக்கு கூட தீர்வைத்தேடாமல் காலம்கடத்திவிட்டு இன்று மீண்டுமொரு மாநகர சபைத்தேர்தலை அதுவும் புதிய வட்டார தேர்தல் முறையில் சந்திக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
30 வருட வரலாற்றில் கல்முனை மாநகரத்தை ஆட்சி செய்த முஸ்லிம் காங்கிரஸிற்கு 2018 மாநகர சபைத் தேர்தல் எவ்வாறு அமையப்போகிறது?
- வட்டார முறைத்தேர்தலில் முஸ்லிம்களுக்கான 17 வட்டாரங்களிலும் தனது வாக்கு வங்கியை தக்க வைத்துகொள்ளுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
- சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி கோரிக்கையை முன்னிறுத்தி தனியாக சுயேட்சைக்குழுவில் கேட்பதால் ஏனைய 11 வட்டாரங்களிலுமாவது அது வெற்றிகொள்ளுமா?
- 30 வருடமாக கல்முனை மாநகரத்தின் அபிவிருத்தியிலே ஏனைய மாநகரங்களுடன் ஒப்பிடுகையில் சிறியளவாவது குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் கடந்த காலங்களில் ஆட்சி செய்த கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் மக்கள் தொடர்ந்து வாக்களிப்பார்களா?
- தேசிய ரீதியில் முஸ்லிம் உரிமை அரசியலில் முஸ்லிம் கட்சிகள் விட்ட பல தவறுகள்; தொடர்ந்தும் ஊழல் நிறைந்தஇ பணத்தை மையமாக கொண்டு அரசியல் செய்து பழகிய முஸ்லிம் கட்சிகளுக்கும் மக்கள் தொடர்ந்தும் வாக்களிக்க தயாரா?
- மாற்று முஸ்லிம் அரசியல் கொள்கைகளை முன்வைத்து அரசியலில் வந்திருக்கின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னனி போன்ற கட்சிகளின் வருகையால் இந்த மாற்றம் ஏற்படுமா? போன்ற பல கேள்விகளுக்கான விடை இத்தேர்தல் முடிவில் தொக்கிநிற்கின்றன. கல்முனை மாநகர சபையில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப்பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளில் ஏற்படப்போகும் மாற்றம் எதிர்கால சமூக அரசியல் நகர்வுகளில் மிக முக்கிய மாற்றங்களுக்குரிய ஆரம்பமாகவே கருதப்படுகிறது. முஸ்லிம்களை பொருத்தவரையில் இம்மாற்றம் தேசிய அரசியலில் கூட மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய நிலையை தோற்றுவிக்கலாம்.
சுhய்ந்தமருது தனக்கான உள்ளு10ராட்சி சபைத்கோரிக்கையை முன்வைத்து இத்தேர்தலில் முன்னிறுத்தியிருக்கின்ற சுயேட்சை குழு எதிர்கால கிழக்கிலங்கை அரசியலில் மட்டுமல்ல இலங்கை நாட்டின் உள்ளுராட்சி சபை அரசியலில் ஒரு புதிய வழிமுறையை தோற்றுவிக்குமா என்பதை தற்போது ஊகிக்க முடியாவிட்டாலும் இம்முறைமை ஏனைய ஊர்களும் கட்சியை மையப்படுத்திய தேர்தலுக்கு அப்பால் உள்ளுராட்சி சபை அல்லது தமது ஊர் அல்லது சமூகம் சார் உரிமைகளையும் கோரிக்கைகளையும் முற்படுத்தி மாற்று வழிமுறைகளை சிந்திக்கக்கூடிய ஒரு திறவுகோலாக அமையலாம். இத்தேர்தல் முடிவு தமது கோரிக்கையை வென்றெடுப்பதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக பார்க்கப்படுகிறது. இவ்வழிமுறை எதிர்கால உள்ளுராட்சி தேர்தல்களில் ஒரு ஊரை மையப்படுத்திய அரசியல் குழுவிற்கு அல்லது அரசியல் தலைமைத்துவத்திற்கு வித்திடக்கூடும் அல்லது கட்சிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கக்கூடிய குழுவாக மாறவும் கூடும். ஏலவே காத்தான்குடி மற்றும் அக்கரைப்பற்று போன்ற ஊர்களில் ஊரை மையப்படுத்திய அரசியல் தலைமைகளை கண்ட அனுபவம் இப்பிராந்தியத்தில் காணப்படுகிற அதேவேளை இம்முறைமையின் சாதக பாதகங்கள் பற்றிய விமர்சனக்கருத்துக்கள் காணப்படுகின்றன. ஒரு உள்ளுராட்சி சபையினுள் அவ்வூரைச்சார்ந்த கட்சிகள் குழுக்கள் அல்லது தனிநபர்கள் செல்வாக்கு செலுத்தினாலும் மாகாண மற்றும் பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்கு தேசியஇ பிராந்திய அல்லது சமூக ரீதியான பரந்து வியாபித்துள்ள கட்சிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இல்லாவிட்டால் பல உள்ளுராட்சி சபைகள் இணைந்த தொகுதி வாரியான ஒரு கூட்டிணைந்த வடிவத்திற்கு இம்முயற்சிகள் இட்டுசெல்லக்கூடிய சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை. எவ்வாறான வழிமுறைகளானாலும் மாகாண மட்டத்திலும் தேசிய ரீதியிலும் கடந்த கால முஸ்லிம் அரசியல் பிரிவினைகளினால் ஏற்பட்ட பாதகங்கள் ஏதாவொதொரு ஒருங்கிணைப்புள்ளியை நோக்கி நகர வேண்டிய தேவையை மீண்டும் மீண்டும் வலியுருத்திநிற்கின்றன. இப்படிப்பினைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு தேர்தலாக இத்தேர்தல் அமையுமா?
இறுதியாகஇ பல வருடங்களாக ஊழல்இ ஏமாற்று அரசியலையும் பிரதேசவாத இனவாத சிந்தனைகளையும் விதைத்து தனிநபர் அரசியல் இலாபங்களுக்காக சமூக நலன்களை விற்றுக்கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகளை விட்டு விட்டு மாற்று அரசியல் கட்சிகளுக்கும்இ சிறந்த திறமையான சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்;வை தேடித்தரக்கூடிய வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கவேண்டிய ஒரு கட்டாய நிலைக்கு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு வழிகளிலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இது எமது அரசியல் கட்டமைப்பில் கடைநிலை மட்டத்தில் மக்களின் பிரதிநிதிகளை தேர்வுசெய்யும் தேர்தலாக இருந்தாலும் அடுத்த கட்ட மாகாண தேசிய மாற்றத்தினை முன்னோக்கி நகர்த்தும் மிக முக்கியமான தேர்தலாகவே இம்முறை அநேக இடங்களில் இத்தேர்தல் பார்க்கப்படுகிறது. கல்முனை மாநகர சபைத்தேர்தல் மட்டுமல்ல குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை சபைகளில் இந்த மாற்றம் ஏற்படக்கூடிய அறிகுறிகளே அதிகமாக தென்படுகின்றன. இம்மாற்றத்தின் மூலமே எமது நகரங்களை இலங்கையிலேயே சிறந்த நகரங்களாக கட்டியெழுப்ப முடியும். சிங்கள தமிழ் முஸ்லிம் சமுகங்கள் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். ஓவ்வொரு ஊருக்கும; உள்ளுராட்சி சபைக்குமான உரிமைகளை பெற்று அவ்வூர்கள் தமது அபிவிருத்தியை முன்கொண்டு செல்ல முடியும்.
Tuesday, December 18, 2018
2004 சுனாமி நினைவாக..........................நமது கரையோர நகரங்களின் எதிர்காலமும் அரசியலும்
அஸ்லம் சஜா
26 December 2017
இன்றுடன் 13 வருடங்கள் கடந்துவிட்டன. 2004ம் ஆண்டு டிஸம்பர் மாதம் 26ம் திகதி இலங்கை வாழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் அனைவரையும் ஒரு கணம் அதிரவைத்த அந்த துயர சம்பவங்கள். இன்றும் என்றும் இலங்கை வரலாற்றில் பல மாற்றங்களுக்கும் காரணமான ஒரு நிகழ்வாக பதியப்பட்டிருக்கிறது. தம் வாழ்நாளிலே மறக்க முடியாத வரலாற்று நிகழ்வுகளை மீட்டும் இத்தருணத்தில் நாம் வாழும் பிரதேசங்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதையும் திட்டமிடவேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலங்கை சமூகத்தின் இயங்கியலில் ஒரு பாரிய மாற்றத்தினை இந்த சுனாமி ஏற்படுத்தியது. 1957ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் 1978ம் ஆண்டு சு10றாவளி என்று எம் முன்னோர் எமக்கு வரலாறு சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் 2004ம் ஆண்டும் 2009ம் ஆண்டும் இயற்கை மற்றும் மனித தூண்டுதலால் ஏற்பட்ட அனர்த்தங்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துக்கொண்டன. இருபது அல்லது முப்பது வருட இடைவெளியில் சமூகங்களில் அது பாரிய அனர்த்தங்களானாலும் சரி அரசியல் சமூக செயற்பாடுகளானாலும் சரி சமூக ரீதியான பாரிய மாற்றங்கள் சராசரியாக இக்கால இடைவெளிகளில் ஏற்படுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. இக்கால இடைவெளியில் தான் பரம்பரை மாற்றங்களும் உருவாகின்றன. இலங்கை போன்ற நாடுகளில் ஒருவர் சராசரியாக திருமணம் செய்து தனது அடுத்த பரம்பரையை உருவாக்குகின்ற வயதின் வீச்சும் இக்கால இடைவெளியாகவே காணப்படுகிறது. உலகளாவிய ரீதியிலான பல்வேறு அரசியல் சமூக மாற்றங்கங்களை நோக்கும் போதும் இருபத்தைந்து முப்பது வருட கால இடைவெளியி;ல் பல திருப்புமுனைகள் ஏற்பட்டிருப்பதையே நாம் அவதானிக்க முடிகிறது. இவ்வரலாற்று ஓட்டத்திலேயே எமது நகரங்களினதும் சமூகங்களினதும் குறிப்பாக இலங்கையின் கரையோர நகரங்களினதும் அதில் வாழ்கின்ற சமூகங்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதைப்பற்றிய ஒரு சிறு குறிப்பை இன்றைய இந்நாளில் அதுவும் குறிப்பாக எமது எதிர்கால கிராம நகர மட்டத்திலான சமூக அரசியல் போக்கை நிர்ணயிக்கும் தருணத்தில் எழுத முற்படுகிறேன்.
உலகிலே கடலால் சுழப்பட்ட தீவுகளின் பரப்பளவு வரிசையில் இலங்கை 25வது இடத்தை வகிக்கிறது. சுமார் 1340 கிலோமீட்டர் நீளமான கடலோரத்தை கொண்டுள்ள இலங்கையின் கேந்திர நிலையைப்பற்றி அரசியல் புவியியல் ரீதியாக நாம் எல்லோரும் அறிந்த விடயம். அது எதிர்கால உலக அரசியல் பொருளாதார செயற்பாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதும் எமக்கு தெரியாத ஒரு விடயமல்ல. உதாரணமாக சீன அரசாங்கம் 2013ம் ஆண்டு (the Belt and Road Initiative) 21ம் நூற்றாண்டின் கடல் மற்றும் தரை மார்க பொருளாதார பாதை - Maritime Silk Route Economic Belt) என்ற மிகப்பாரிய திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது. அத்திட்டம் உலகிலுள்ள 65 நாடுகளை இணைக்கின்றது.
இச்சூழலில் இலங்கையின் கரையோர நகரங்கள்
(coastal cities) முக்கிய இடத்தை வகிக்கின்றன. உலகில் காணப்படும் நகரங்களில் மலையை அண்டிய நகரங்கள் மற்றும் கரையோர நகரங்கள் மிகப்பிரதான இடத்தை வகிக்கின்றன. இந்நகரங்களுக்கிடையே புவியியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலங்கையில் அதிகமான சனத்தொகை அடர்த்தியுடன் கூடிய நகரங்கள் கரையோரங்களிலேயே காணப்படுகின்றன. இலங்கையிலுள்ள 23 மாநகர சபைகளில் 11 மாநகர சபைகள் மற்றும் பல்வேறு நகர சபைகளும் கரையோரங்களிலே காணப்படுகின்றன. இலங்கையின் சனத்தொகையின் 60% கரையோர பகுதிகளிலேயே வசிக்கின்றனர். மொத்த தேசிய உற்பத்தியில் 44% கரையோர பகுதிகளிலே பங்களிப்புச்செய்வதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இவ்வாறு இலங்கை நாட்டின் பல்வேறு சமூக அரசியல் பொருளாதார பங்களிப்பினை செய்யும் கரையோர நகரங்களை அபிவிருத்தி செய்வதும்; பாதுகாப்பான பசுமை நிறைந்த வசிக்கக்கூடிய (Liveable cities) நகரங்களாக மாற்ற தவறும் பட்சத்தில் எதிர்கால சமூகம் தூய்மையாக சுவாசிக்கக்கூட முடியாத ஒரு நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 2004ம் ஆண்டு சுனாமி 30,000 பேரின் உயிர்களை காவு கொண்டதோடு 500,000 மக்களையும் இடம்பெயர வைத்தது. இது இலங்கையின் 75% மான கரையோர பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே இலங்கையை பொறுத்தமட்டில்; நமக்கும் எதிர்கால சந்ததிக்குமான மிகப்பெரும் கேந்திர மையங்களாக கரையோர நகரங்களும் கிராமங்களும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்நகரங்களை ஆகக்குறைந்தது மாசற்ற துர்ய்மையான காற்றை சுவாசிக்கக்கூடிய நகரங்களாக மாற்றியமைப்போமானால் அதுவே மிகப்பெரிய சாதனையாகும்.
உலகிலே மிகச்சிறந்த நகரமாக 2017ம் ஆண்டு முதலிடத்தை பெற்ற நகரம் அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரமாகும். உலகின் 15க்கு மேற்பட்ட நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களையும் அவுஸ்திரேலியாவின் ஆறு மிகப்பெரிய நகரங்களுள் நான்கு நகரங்களுக்கும் சென்ற அனுபவத்தில் மெல்பேன் போன்ற நகரங்கள் உலகிலேயே வாழ்வதற்கு மிகச்சிறந்த நகரமாக தெரிவு செய்யப்பட்டிருப்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. அவுஸ்திரேலியாவின் 6 பிரதான நகரங்களில் 5 நகரங்கள் கரையோர நகரங்களாகும். மெல்பேன் நகரம் நூற்றிற்க்கு 97.5 புள்ளிகளைப்பெற்று உலகின் 140 நகரங்களில் முதன்மையைப்பெற்றது. இக்கணிப்பீடு உலகில் காணப்படும் நகரங்களின் சுகாதார சேவை, கலாச்சார பாரம்பரிய விடயங்கள் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, கல்வி உட்கட்டுமானம் மற்றும் நகரங்களின் நிலைபேறு தன்மை (stability) போன்ற விடயங்களை மையமாக வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளுடம் எம்மை சிறிதளவேனும் ஒப்பிட முடியாவிட்டாலும் இலங்கையினுள் எமது நகரம் இவ்வாறான முக்கிய காரணிகளில் சிறந்து விளங்க எமது நகரங்களை நாமும் எமது அரசியல் சமுக தலைமைகளும் கடந்த காலங்களில் என்ன செய்திருக்கிறார்கள் என நினைக்கும் போது நாம் இன்னும் 30 வருடங்கள் சென்றாலும் இலங்கையிலாவது ஒரு சிறந்த பாதுகாப்பான பசுமையான நகரில் வாழமுடியுமா என்பது கேள்விக்குறியே!
ஒரு சிறந்த நகரம் உருவாக பொருளாதார ரீதியான அபிவிருத்தி சமூக செயற்பாடுகளில் முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சுழலை பொருப்புணர்வுடன் கையாளுதல் என்பவற்றுடன் சிறந்த அரசியல் நிர்வாக தலைமைத்துவத்தின் வழிகாட்டல் காணப்படவேண்டும். பொருளாதார ரீதியான அபிவிருத்தியில் பல்வேறு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், வியாபார கேந்திர நிலையமாக மாறல், சுய தொழில் முயற்சிகள் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் சரியான ஆய்வுகள் மூலம் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். இதேபோல் சமூக செயற்பாடுகளில் கல்வி சுகாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு விடயங்கள் (வீடு மற்றும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிறுவனங்கள்) மிக முக்;கிய கவனம் செலுத்தப்பட வேண்டியவை. சுற்றுச்சுழலை கையாளும் விடயங்களில் கழிவு முகாமைத்துவம் சுத்தமான நீர் வநியோகம் பசுமையான இடங்கள் சிறந்த போக்குவரத்து வசதிகள் முறையான சூழல் பாதுகாப்பு செயன்முறைகள் என்பன திட்டமிடப்பட்டு மக்களுக்கு அவற்றின் முக்கியத்துவம் வலியுருத்தப்பட வேண்டும். ஓரு நகரினுள் காணப்படும் வளங்களை இணங்கண்டு அவற்றை வினைத்திறனுடைய திட்டங்களாக மாற்றி சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். கரையோர நகரங்களில் காணப்படும் கடல் வளங்களை சுழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பயன்படுத்தி நகரத்தினை மிகப்பெரிய பொருளாதார மையமாக மாற்றக்கூடிய திட்டங்களை சிந்திக்க முடியும். எல்லா வகையான திட்டங்களிலும் சுகாதார சு10ழல் பாதிப்புக்களை குறைக்கக்கூடிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதும் அவற்றை ஊக்குவிப்பதற்குமான சலுகைகளை வழங்குவதையும் அவற்றை செயற்படுத்துவதற்கும் திட்டங்களுக்கு மாற்றமான செயற்பாடுகளுக்கும் மிகக் கடுமையான சட்ட ஒழுங்குகளை மேற்கொள்வதிலும் உள்ள10ராட்சி சபைகள் பின்னிற்கக் கூடாது.
உதாரணமாக ஒரு சிறந்த நிறுவனத்திற்கான எடுத்துக்காட்டாக இலங்கையிலுள்ள பல அரச நிருவனங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது அம்பாரை பொது வைத்தியசாலை எனது ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு சிறந்த தலைமையின் ஒரு அரச நிறுவனம் கொண்டிருக்கவேண்டிய அனைத்து விடயங்களையும் மிகச்சிறப்பாக திட்டமிட்டு சுழல் காரணிகளெல்லாவற்றையும் கவனித்தில்கொண்டு அமையப்பெற்ற இவ்வைத்தியசாலை உலக தரத்தில் பல விருதுகளை வென்றுள்ளது என்பது எதுவும் எம்மால் எமது நாட்டில் சாத்தியப்படுத்த முடியும் என்பதையே காட்டுகிறது. என்ற இணையத்தளத்தில் சென்று அதன் வளர்ச்சியையும் அதன் திறமையான நிர்வாக செயற்பாடுகள் மற்றும் அது பெற்ற பல்வேறு தேசிய சர்வதேச விருதுகளை வைத்து அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு அரச நிறுவனமும் அதன் சேவையையும் அபிவிருத்தியையும் சமூக பொருளாதார சு10ழல் காரணிகளை மையமாக வைத்து அது அப்பிரதேசத்தின் வளர்ச்சியிலே பாரிய பங்களிப்பினை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இவை சிறந்த உதாரணங்களாகும்.
கரையோர நகரங்களைப்பொருத்தமட்டில் நிலப்பற்றாக்குறை ஒரு பாரிய பிரச்சினை என்பது நாம் எல்லோருமறிந்த விடயம். இலங்கையின் சனத்தொகை அடர்த்தி வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. 2016ல் இலங்கையின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 350 பேராகும். ஆனால் நகரங்களில் அதிலும் குறிப்பாக கரையோர நகரங்களின் சனத்தொகை சில நகரங்களில் நாட்டின் சனத்தொகை சராசரி அடர்த்தியை விட 20 மடங்கு அதிகமாகும் அதாவது ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 5000த்தையும் தாண்டிக்காணப்படுகின்றது. மேல்மாகணத்திலுள்ள அதிகமான கரையோர நகரங்கள் 5000த்தையும் தாண்டிகாணப்படும் அதேவேளை கிழக்கு மாகாணங்களிலுள்ள கரையோர நகரங்களான ஏறாவூர், காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவுகளின் சனத்தொகை அடர்த்தியும் மேல்மாகாண கரையோர நகரங்களைப்போன்று பன்மடங்கு அதிகமாகும். எனவே எதிர்கால கரையோர நகரங்களின் அபிவிருத்தி; மிகத்துல்லியமாக திட்டமிடப்படாத விடத்து சுனாமி போன்ற பாரிய அனர்த்தங்கள் இல்லாமலே பல சமூக நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும்.
எமது நகர அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் நகர எல்லைகளுக்குள் நடைபெறும் கட்டட நிர்மாணப்பணிகள் சட்ட வரையறைகளுக்குள் கொண்டு வரப்படவேண்டிய தேவை மிக அவசியமாகிறது. சமூக பாரம்பரிய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கட்டட உட்கட்டமைப்பு வசதிகள் பாதுகாக்கப்படவேண்டும். டெல்லி மும்பாய் போன்ற இந்தியாவின் பாரிய நகரங்கள் எவ்வாறு பாரம்பரிய கலை கலாச்சார தடயங்களை பாதுகாத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு நகரங்களின் சனத்தொகை இலங்கை நாட்டின் மொத்த சனத்தொகைக்கு ஒப்பானதாகும். அவ்வாறன பாரிய சனத்தொகை அடர்த்தியான நகரங்களே பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கலை கலாச்சார பாரம்பரியங்களை பாதுகாத்து வரும் நிலையில் இலங்கையிலுள்ள மிகச்சிறிய நகரங்களில் எமது கலாச்சார பாரம்பரிய பரிமாணங்களை அபிவிருத்தி எனும் போர்வையில் எந்த தூரநோக்கற்ற திட்டமிடல்களும் இல்லாமல் அழித்து வருகிறோம். இந்தியாவின் இன்னுமொரு நகரான சன்டிகார் பற்றி இவ்விடத்தில் விளக்குவது பொருத்தமென நினைக்கிறேன். சர்வதேச ரீதியாக நகர கட்டக்கலைக்கும் நகர வடிவமைப்பிற்கும் ஒரு சிறந்த திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் தான் சன்டிகார் நகரம். சர்வதேச புகழ்பெற்ற பிரென்ஞ் நாட்டு கட்டிடக்கலைஞர் லா கபூச்சார் ன் திட்டமிடலில் இந்நகரம் உருவாக்கப்பட்டது. இந்நகரம் 2016ல் வின் உலகின் பண்பாட்டு மரபுரிமை நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்நகரம் இந்தியாவின் முதலாவது பிரதமர் ;ஜவஹர் லால் நேருவின் ஒரு கனவு நகரமாக உருவானது. இவ்வாறு பல்வேறு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லமுடியும். ஆனால் எமது சமூக அரசியல் தலைமகளுக்கு கனது நகரங்களை இவ்வாறான தூரநோக்குள்ள சிந்தனையில் உருவாக்குவதற்கான தகுதியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறான கட்டிட உட்கட்டுமான பொருளாதார அபிவிருத்திக்கு மேலாக சமூக சீர்கேடுகளை தடுக்க வேண்டிய ஒரு பாரிய பொருப்பும் கரையோர நகர சமூக அரசியல் தலைமைகளுக்கு காணப்படுகிறது. மார்க்க அரசியல் கோள்கை ரீதியாக நாளுக்கு நாள் பிரிவினைக்குள் அகப்பட்டிருக்கும் சமூகத்தில் எல்லோரையும் பாதிக்கும் எத்தனையோ சமூகப்பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சமூக கலாச்சார விழுமியங்களுக்கப்பால் மாணவர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைவஸ்து பாவனை சிறுவர் துஸ்பிரயோகம் பெண்களுக்கெதிரான வன்முறைகள் போன்ற சமூக குற்றங்கள் மற்றும் பொருளாதார ரீதியான மோசடிகள் களவுகள் என சமூகப்பிரச்சினைகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லமுடியும். இப்பிரச்சினைகளை சமூக வல்லுணர்களைக்கொண்டு ஆராய்ந்து இச்சீரழிவுகளை முற்றாக ஒழிப்பதற்கான திட்டங்களை மேற்கொண்டு பாதுகாப்பான ஒரு நகரமாக எமது பிரதேசங்கள் மாற்றமடைய ஒருங்கிணைந்து செயற்படவேண்டும். அதிகமான அரசியல் தலைமைகளம் அடிவருடிகளும் இதில் பங்குதாரர்களாக இருப்பது எமது நகரங்களின் சாபக்கேடாகும். இப்பிரச்சினைகளைப்பற்றி ஒரு வார்த்தையேனும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது ஏனெனில் அதில் அவர்கள் தான் மிக முக்கிய பங்குதாரர்கள். இதை அரசியல் தலைமைகள் சமூக செயற்பாட்டாளர்களுக்கு விட்டு விட்டு தனது கொந்திராத்தி வேலைகளில் கவனம் செலுத்தி இலஞ்ஞம் ஊழல் மூலமாக பொருளாதார ரீதியாக சுகபோகம் காணும் நிலையே எமது பிரதேசங்களின் துரதிஸ்டமான நிலையாகும்.
2004ம் ஆண்டு சுனாமி ஏற்படும் போது அது பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. சுனாமி பூமியதர்ச்சி போன்ற பாரிய இயற்கை அனர்த்தங்கள் மற்றும் தீ, வாகன விபத்துக்கள், தொற்று நோய் பாதிப்புக்களிலிருந்து எமது நகரங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் எதிர்வரும் உள்ளுராட்சி சபைகள் சிறந்த திட்டமிடல்களை மேற்கொண்டு செயற்படவேண்டும். தூர நோக்குடன் சிந்திக்கக்கூடிய தலைமைகளும் உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படும் வரை எமது நகரங்களை அழிக்க சுனாமி போன்ற மிகப்பாரிய அனர்த்தங்கள் வரவேண்டியதில்லை. எமது நகரங்களை அழிக்க நாம் தெரிவுசெய்யும் சுயநலம் கொண்ட கயவர்களும் பண முதலைகளுமே போதுமானவர்கள். கடந்த 30 வருடங்களாக நாம் தெரிவு செய்த கட்சிகளினதும் உறுப்பினர்களினதும் வெளிப்பாடே எமது நகரங்களின் தற்போதைய வடிவங்களாகும். இவ்வாறான நிலை தொடருமானால் மீண்டும் பல வருடங்களுக்கு கைசேதப்படவேண்டிய நிலையே ஏற்படும். சமூக அரசியல் தளங்களில் ஏற்பட்டிருக்கும் ஒரளவு சாதகமான இச்சந்தர்ப்பத்தை மக்கள் பயன்படுத்தி அரசியல் மாற்றத்தினூடாக தமது உரிமைகளையும் அபிவிருத்தியையும் அடைய ஒன்றுபடுவதே மனித வடிவில் எம்மை காவுகொள்ள நினைக்கும் பண முதலைகளிலிருந்தும் மனித சுனாமிகளிலிருந்தும் எமது நகரங்களையும் எமது மக்களையும் பாதுகாக்க முடியும். மக்கள் தொடர்ந்தும் விழிப்புணர்வூட்டப்பட்டு தனது பிரதேசங்களை முன்னேற்றுவதில் ஒரு செயற்பாட்டு பங்குதாரராக மாறாத வரை எமது நகரங்கள் மீண்டும் ஒரு அழிவை மிக விரைவில் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.
விரிவுரையாளர் | பொறியியல் பீடம் | தென்கிழக்கு பல்கலைக்கழகம்

Locally empowered innovative mobile application to enable effective solid waste collection
Mr. Shihab Aaqil, University of Peradeniya and Mr.
Rouzin Azar, South Eastern University of Peradeniya
Day to day accumulation of solid wastes without proper management
has resulted in the eruption of several garbage flocks, especially in the cities
with condensed, urbanized dwellings in Sri Lanka. Daily collection of solid
wastes from households is not counterbalanced with the effluxion to the local
government garbage vehicles, because of the limited availability,
mal-allocation and mal-distribution of resources without a proper systemic
management. As a consequence, the over accumulated wastes find their
settlements in the dumpsites near public places and busy streets. The recent
Meethotamulla garbage dump collapse which killed many lives and damaged the
habitat, well indicate the problem as a less concerned subject. The dengue, an
unsolved puzzle which is partially accommodated by the garbage heaps, also
points out the recklessness of all relevant stakeholders regarding this issue
in the past years. Nevertheless, there have been some measures at the national
level to overcome this tragedy and recently a step has been marched, by means
of developing a "National Action Plan for Waste Management" by the key
government ministries in consultation with several stakeholders at national and
sub-national level.
Many professionals and youth, who were concerned about this issue
could have been curious to come up with ideas to find out innovative solutions
for effective waste management. Since, with this thought, a group of youth from
Ampara district of Sri Lanka extended their idea of incorporating modern
technologies in the 'collection of waste’, which they found as a serious issue
in their region, particularly in the Municipality of Kalmunai located in the East
coast in Ampara district. They were keen in developing a mobile application to
make the waste collection effective and efficient. A team of youth comprising
of members from ideaGeek and Youth Creative Action Network (UCAN) had several
brainstorming discussions and finally ended up with a product named as
"CITIZEN", a fully-fledged mobile app to facilitate the general
public and local authorities for an effective collection of waste in resource
limited settings.
IdeaGeek, which was established in 2013, is a digital solution
provider, powered by creative ideas that are fueled by a team of professionals,
whose field of expertise is web and app technologies. They also have extended
their realm in digital marketing as desktop application developers. Youth
Creative Action Network (UCAN) was formed in 2016, is an organization which is
intended in promoting the social standard a step further through innovation
into practice. UCAN was initiated by a like-minded group of young individuals
from all three ethnicities with the aim of contributing to reconciliation and
innovation in Ampara district. Initially, UCAN received a seed grant from a
youth innovation program supported by US Embassy in Colombo to pilot new
innovative ideas proposed by five youth groups from Ampara district. Since the
participants realized the importance of innovation, UCAN was formed to carry
out innovative social projects by the youth, which could also serve as service
learning projects during their undergraduate studies. In this background, the solid
waste collection was found to be a major social issue within the Kalmunai region
and it was believed that the technology could offer an innovative solution to
the problems at stake. As a subsequent step UCAN members were entrapped towards
developing a mobile application. But UCAN members found hard to initiate this
due to lack of resources. At the same time, team UCAN came to know that, ideaGeek
was interested in involving Corporate Social Responsibility (CSR) activities. Then,
UCAN collaborated with ideaGeek to commence the progression of the development
of a mobile app through this project.
Both team members discussed and drafted a plan considering the need
of this app, goals, development, awareness to the public, feasibility,
implementation, timeline and measures to evaluate the project. Meanwhile, the
team decided to use the Global Positioning System (GPS) technology with the
support of Mobitel (Pvt) Ltd. Kalmunai Municipal Council (KMC) was interested
to carry out this project with the Citizen team after an elaborative session.
The need for this app was realized after the visualization of
several garbage dumps near the public places and polluted water resources in
spite of the collection by the KMC. The goal is to create a nature friendly,
hygienic and healthy environment with reduced risks from spreading of
communicable diseases within this region. Hence, changing the attitude of the
general public through a systemic approach to get rid of this national calamity
from Sri Lanka. Above all, there are direct benefits to the public and KMC.
Facility to locate the truck and a prior notification to the public through an
arrival roster, will help the public to be prepared with their garbage packs.
Thereby it will reduce the duration of time that a truck spends at a household.
Consequently the distance covered per day by a truck will be maximized.
The development of the application initially started under a
hypothesis that around 85% of the residents from KMC are smartphone users;
among them majority of the people are Android users. Thus, ideaGeek team
targeted on developing the app initially to the playstore and to progress
further. Besides, the team hoped that the usage of this app by the households
could be the major challenge in its success. Then the citizen team decided to
seek the help of community based organizations, youth clubs, voluntary
organizations and religious creeds to overcome this challenge. The feasibility
study of the app was planned to be carried out within the localities of KMC,
through a pilot trial. Eventually, the success of the project will be assessed
by the index like diminution of health risks, from the data of epidemiology
unit under RDHS office, eye-catching garbage free water resources, and public
places and the survey results among the public.
In the meantime, an idea competition in the name of
"iVoice" was organized by Sri Lanka Development Journalist Forum
(SDJF) under the sponsorship of United Nations Population Fund (UNFPA). In this
competition, the idea was pitched by the CITIZEN team and it got selected
within top 20 ideas out of 119 ideas proposed around the Island. As a next
step, the idea won a place among the top 10, in the final residential workshop
held in Colombo. The team was presented a grant to carry out this project within
three months duration which ends in 31st of December 2017. The
selection of the idea in the national platform made the team more enthusiastic
and added more energy to the work.
The works proceeded with several trials and fixing of technical
faults for a better rectification of the mobile application before launching it
to the public. The app reached its final stages and a pilot launch was
organized on 20th of December 2017, with the participation of
Kalmunai Municipal Council Commissioner, Engineer, staff and representatives of
SDJF, UNFPA, ideaGeek members, UCAN advisor with UCAN volunteers. In this
launch the app was introduced and a pilot trial was performed with one truck,
in the presence of invitees. The GPS devices will be fixed in all the available
trucks at KMC. The app will be officially launched and available in the
playstore for utilization of the public. The members of the UCAN and ideaGeek team
are looking forward to further advance this mobile application with new
additional features to enable a complete technology embedded solution to the
emerging solid waste management problem in Sri Lanka.
(UCAN members; Mr. Shihab Aaqil of University of Peradeniya and Mr.
Rouzin Azar of South Eastern University of Sri Lanka have contributed in
writing this article).
Sunday, December 9, 2018
Weather Related Disasters in Sri Lanka: Most Vulnerable and Where to Find Them Wimal Nanayakkara
Wimal Nanayakkara writes about way forward for dealing with disasters in Sri Lanka
The available data on natural disasters, covering a long period of
time, need to be analysed in depth. These
findings should be used by city and town planners, as well as rural area
planners, both at the national and the regional levels, when developing effective
strategies to minimise the social and economic impacts of natural disasters. The
sharing of available data/information and the proper coordination and
collaboration between government agencies are absolutely essential in this
regard.
The following recommendations should also be implemented.
- Developing a comprehensive database and up to date website giving information on high risk areas, trends in natural disasters, the number of persons affected, time periods during which the disaster occurred by regions, etc.
- Mapping areas frequently affected by floods, droughts, landslides, storms etc., so that people can avoid the high risk areas.
- Making early warning systems more effective and efficient, so that the damage and loss of life is minimised.
- Using the available information, especially past trends, to control and reduce the adverse effects of natural disasters and to develop coping strategies.
- Establishing an effective system to rehabilitate the affected people, especially the poorer and economically vulnerable groups, to recover their assets and to help them to get on track to proceed with their livelihoods.
https://climatenet.blogspot.com/2018/11/weather-related-disasters-in-sri-lanka.html
SL ranked second in the Global Climate Risk Index 2019
Sri Lanka had been ranked second among
the countries most affected by extreme weather events in 20 years since
1998 in the Global Climate Risk Index 2019.The Long-Term Climate Risk Index listed Sri Lanka, Puerto Rico as the top two affected countries.
Sri Lanka was ranked fourth in the
Climate Risk Index (CRI) in 2016 and it was in the 76th position in the
Human Development Index (HDI) in 2017.
The Global Climate Risk Index 2019, was
released at the annual climate summit in Poland's Katowice city
yesterday. The report was prepared to analyse damages caused by the
extreme weather events that took place from 1998 to 2017.
According to the annual CRI for 2017,
Puerto Rico, Sri Lanka and Dominica ranked as the most affected
countries in 2017 followed by Nepal, Peru and Vietnam. For the period
from 1998 to 2017, Puerto Rico, Honduras and Myanmar rank highest. Nepal
was ranked fourth and India 14th in the list.
According to the index, altogether, more
than 5,26,000 people died as a direct result of more than 11,500
extreme weather events; and losses between 1998 and 2017 amounted to
around US$ 3.47 trillion.
The Index said, in May 2017, heavy
landslides and floods occurred in Sri Lanka after strong monsoon rains
in southwestern regions of the country. More than 200 people died after
the worst rains on the Indian Ocean island since 2003. The monsoons
displaced more than 600 000 people from their homes and 12 districts
were affected. The inland southwest district of Ratnapura was most
affected where over 20,000 people faced flash floods.
The Global Climate Risk Index 2019
analyses to what extent countries and regions have been affected by
impacts of weather-related loss events such as storms, floods, heat
waves etc. The most recent data available for 2017 and from 1998 to 2017
were taken into account. (Chaturanga Samarawickrama)
Subscribe to:
Posts (Atom)